michael_faradeyமின்சார மோட்டார், மின்சார ஜெனரேட்டர் ஆகியவற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர் விஞ்ஞான மேதை மைக்கேல் ஃபாரடே.  மிக எளிமையான ஆடைகளை அணிந்து கொண்டு தான் ஆய்வுக்கூடத்திற்கு போவார்.  ஒருநாள் ஆய்வுக் கூடத்தைப் பார்வையிட வந்த ஓர் உயர் அதிகாரி மிகவும் எளிய உடையோடு காணப்பட்டார்.  ஃபாரடேயை பார்த்து முகத்தை சுளித்தவாறே, யாரய்யா நீ? என்று கேட்டார்.ஃபாரடே அடக்கமாக பதில் சொன்னார்.“நான் ஆய்வுக்கூடத்தில் வேலை செய்கிறவன்”.

அப்படியா எவ்வளவு காலமாக இங்கே வேலை செய்கிறாய்? என்றார் அந்த அதிகாரி.

கடந்த பல ஆண்டுகளாக நான் இங்கே வேலை செய்து வருகிறேன் என்று பதில் சொன்னார்.“

பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன் என்கிறாய்..நல்ல ஆடைகளை வாங்கி அணியக்கூட உனக்கு வசதி இல்லையா? இங்கே உனக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லையா? என்றார்.

இல்லை…இல்லை…அப்படியெல்லாம் ஒன்றுமில்லை…சம்பளமெல்லாம் நிறையவே கொடுக்கிறார்கள்…என்றார் ஃபாரடே.

அதைக் கேட்ட அதிகாரி சற்று ஏளனமாக, சரி, சரி… உன் பெயர் என்ன? என்று கேட்டார்.

என் பெயர் மைக்கேல் ஃபாரடே! என்றார்.. அதைக் கேட்ட அதிகாரி வியப்பில் விழிபிதுங்கி நின்றார்.. பாரடேயிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

Related Posts :