மோடிக்கு தூதுவிடும் அமெரிக்கா
பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று அமெரிக்கா அறிவிப்பு விடுத்துள்ளது.வரும் லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் அவருடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.2002 ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை காரணம் காட்டி, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருகிறது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்கா துணை வெளியுறவு செயலாளர் நிஷாபிஸ்வால், வரும் தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமர் ஆனால் அவருடன் இணைந்து வர்த்தக உறவு வைத்துகொள்ள தயார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த தலைவரையும் வரவேற்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
Related Posts :
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை டி ...
கூகுள் கார்ப்பரேஷன் நிறுவனம் Android Wearable Smart Watc ...
துளசி எண்ணெயில் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது ...
இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத் ...
இந்தியாவில் தபால் துறை தனது சேமிப்பு வாடிக்கையாளர்களுக்க ...
0 comments Monday 10 Mar 2014 | செய்திகள்