goat-3தரை: நமது தட்பவெப்பச் சூழலுக்கு செம்மண், சரளை மண் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றை தரை மட்டத்திலிருந்து 45 செ.மீ. உரத்திற்குப் பரப்பி திமிசுக்கட்டையால் நன்கு இடித்து கடினமாக இறுகச் செய்யலாம். இவ்வாறு தரை இருப்பதனால் ஆடுகளின் சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆட்டுப் புளுக்கையினை கூட்டிப்பெருக்கவும் எளிதாக இருக்கும். தரையை வருடத்திற்கு இரண்டுமுறை 15 செ.மீ. ஆழத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு புதிய மண் கொட்டி பரப்பித் தரையை அமைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்த இது உதவும். மழை நாட்களில் வாரத்திற்கு இரண்டு முறை சுண்ணாம்புத்தூளை தரையில் தெளிக்க வேண்டும். தரையின் ஈரப்பதத்தை சுண்ணாம்பு ஈர்த்து உலரச் செய்வதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

மரச்சட்ட மேடை வடிவ தரை: ஆட்டுக்குட்டிகளை மண் தரையில் விட்டு வளர்த்தால் மண் நக்குதல் பழகி ரத்தக்கழிச்சல் நோயால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனி மற்றும் மழைக் காலத்தில் இரவு வேளையில் மண் தரை குளிர்வாக இருப்பதால் ஆட்டுக் குட்டிகள் குளிர் தாங்காமல் சளி பிடித்து இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆட்டுக்குட்டிகளை தரையில் விடாமல் மூன்று மாத வயதுவரை மரச் சட்டங்களினால் ஆன பரண்மீது விட்டு வளர்ப்பது நன்று. இம்மரச்சட்ட பரண் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். இரு சட்டங்களுக்கு இடையே 1.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இந்த சந்தில் அடியில் உள்ள எருவினை சேகரித்துக்கொள்ளலாம்.

மரச்சட்டங்களின் அகலம் மற்றும் தடிமண் (கனம்) முறையே 2-4 இன்ச்கள் மற்றும் 1-2 இன்ச் இருத்தல் நலம். தைல மரச்சட்டங்கள் பரண் அமைக்க ஏதுவானவை. தற்பொழுது நவீன முறையில் கொட்டகை அமைக்க மரச்சட்டங்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக்கினால் ஆன சட்டங்களைக் கொண்டும் ஆட்டுக்கொட்டகையில் தரை அமைக்கலாம். இவை சுத்தம் செய்ய எளிதாகவும் அதிக நாள் உழைக்கும் திறனும் கொண்டது.

Related Posts :