goat-1நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உண்ணும் உணவில் புரதச்சத்தின் தேவையும் கூடிக் கொண்டே வருகிறது. இறைச்சி மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதின் காரணமாக மக்களின் புரதத்தேவையை ஈடுசெய்ய முடியும். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் வெள்ளாட்டு இறைச்சியினை கவனத்தில் கொண்டு பார்த்தால் வெள்ளாட்டினை எண்ணிக்கையில் பெருக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு வெள்ளாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய இறைச்சி மற்றும் பாலின் அளவைக் கூட்டி அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதே நமது குறிக்கோளாகும். இதற்கு அறிவியல் பூர்வமான பராமரிப்பு உத்திகளைக் கையாள வேண்டும்.

இதில் முக்கியமான ஒன்று வெள்ளாடுகள் தங்குவதற்கு கொட்டகை அமைப்பது ஆகும். மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு சுருங்கிவரும் நிலையில் கொட்டில் முறையில்தான் வெள்ளாடுகள் வளர்க்கும் நிலை நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. நல்ல முறையில் ஆட்டுக்கொட்டகை அமைத்தால் ஆடுகள் நலமாகவும் வளமாகவும் வளர்ந்து பெருகி நல்ல பலன் கொடுக்கும். இனி ஆட்டுக் கொட்டகையை அறிவியல் ரீதியாக எப்படி அமைப்பது என விரிவாக காண்போம்.

கொட்டகை அமைக்க இடம் தேர்வுசெய்தல்: கொட்டகையை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். மழைநீர் தேங்கிவிடாமல் வடிகால் உள்ள நிலமாக இருக்க வேண்டும். குடிநீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ள இடமாக இருக்க வேண்டும். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனப்பயிர் சாகுபடி செய்ய விளைநிலம் இருக்க வேண்டும்.

Related Posts :