kadal-paasiவிண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியை (ஸ்பைரூலினா), தலைவாசல் பகுதி விவசாயிகள் பண்ணை அமைத்து வளர்த்து வருகின்றனர்.  தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவ கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மழையின்மை, வெள்ளம் போன்றவை மாறி மாறி வருகிறது. மழையின்மையால் ஏற்படும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, பட்டுப்பண்ணை, மூலிகை பயிர் சாகுபடி என பல்வேறு தொழில் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி (ஸ்பைரூலினா) வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடல் வாழ் உயிரினமான பாசிகளில் 27 வகை உள்ளது. அவற்றில் 14 வகை கடல்பாசிகள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் `ஸ்பைரூலினா’ என அழைக்கப்படும் கடல்பாசி மருத்துவ பயன்பாட்டிற்கும், துணை உணவாகவும் அதிகளவில் பயன்படுகிறது. கடல் பாசிகள் சில ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுத்து மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அதன் தேவை அதிகரிப்பு காரணமாக ஆய்வகத்தில் செயற்கையான முறையில் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் மாவட்டம் தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் மட்டும் முதற்கட்டமாக கடல்பாசி வளர்ப்பு தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தலைவாசல் அருகே உள்ள வேநாயகபுரம் கிராமத்தில் ராஜேஸ் என்ற விவசாயி கடல்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

Related Posts :