மும்raghuramgrajanபை: வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கவும், பணம் அனுப்பவும் கட்டண சேவை முறையில் செயல்படுத்த கடந்த புதனன்று நாஸ்காம் தலைமை அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒப்புதல் அளித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் ஆழமான நிதி சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய வங்கியின் அர்ப்பணிப்பு உணர்வினை காட்டுகிறது.

வங்கி கணக்கினை பெற்றுள்ள தனி நபர் மட்டுமே ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணத்தினை பெற்று கொள்ள தற்போதுள்ள ஏடிஎம் வசதி அனுமதி அளிக்கிறது. இந்தியாவில் ஒரு கணிசமான தொகையினர் பணம் அனுப்பும் சேவையை எதிர் நோக்கியுள்ள நிலையில், வங்கி கணக்கினை பெறாதவர்களும் இந்த வசதியினை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வைப்பு நிதி வைத்திருப்பவரின் அங்கீகாரத்தின் மூலம் இந்த வசதியினை அளிக்க மொபைல் தொழில்நுட்பத்தால் முடியும். மாறுதலுக்குரிய வங்கி கணக்கிலிருந்து பணத்தினை எடுக்கும் நிலையில் உள்ள வங்கி கணக்கு பெற்றிராத தனி நபர், இருவருக்கும் பொதுவான வங்கி பணம் எடுத்து கொண்டதற்கான குறியீட்டப்பட்ட பெருநறுக்கான ரசீதையும், பண பரிவர்த்தனைக்கான செயல்முறையையும் முடித்த பின்னர் இந்த வசதியினை பெற முடியும்.

சேவைக் கட்டணம்: மேலும் அவர் நிதி துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தானியங்கி மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பண வரவு குறித்த தகவல்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், தனி நபரின் சேமிப்பு மற்றும் செலவு குறித்த தகவல்களை பராமரிப்பதில் தொழில் நுட்பம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்

Related Posts :