tata-twistடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தற்போது பயன்பாட்டில் உள்ள நானோ ரக கார்களில் புதிதாக டுவிஸ்ட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள “எலக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டீயரிங் சிஸ்டம்’ நெருக்கடிமிக்க கடினமான சாலைகளிலும், பார்க்கிங் செய்யும் போது எளிதாக திருப்புவதற்கும் உதவுகிறது. “குரோம் அக்சன்ட்டுடன் சிக்னேச்சர் டாம்சன் பர்பிள் கலர்’, புதிய உள் அலங்காரமும், சிறப்பம்சங்களும் ஓட்டுவதற்கு புதிய அனுபவத்தை தருகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள “பிரஷ்லெஸ் மோட்டார்’ காரின் உட்புற பாகங்களை உறுதிபடுத்துகிறது. டுவிஸ்டில் உள்ள இ.பி.எ.எஸ் சாதனம் சக்கரம் விடுபட்டவுடன் ஸ்டியரிங்கை நேர்நிலைக்கு திருப்ப உதவுகிறது. புதிய டிரைவர் தகவல் சாதன முறை, இரவு நேர ஆம்பர் டிஸ்பிளே, டிஜிட்டல் கடிகாரம், புளுடூத், கீ லெஸ் என்ட்ரி, மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது முன்பு இருந்த நானோ எல்.எக்ஸ் மாடலுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தக யூனிட் தலைவர் ரஞ்சித் யாதவ் கூறுகையில் “” நானோ துவங்கிய நாள் முதல் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக இருந்து வருகிறது. மேலும், இப்பிரிவின் மதிப்பிற்கு முதன்மை அளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை எதிர் நோக்கும் எங்களது மைய குறிக்கோளுடன் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

எங்கள் கூட்டாண்மை நிறுனவங்களுடன் இணைந்து அதி சிறந்த தொழில் நுட்பம், வடிவமைப்பு பொறியியல் அமைப்புடன் நானோ டுவிஸ்டை தயாரித்துள்ளோம். பல வித கலர்களில் பார்க்க கண்கவரும் டுவிஸ்டை “ஸ்மார்ட் சிட்டி கார்’ என கூறலாம்.” என்றார்.

புதிய நானோ டுவிஸ்ட் எக்ஸ்.டி., விலை ரூ.2.36 லட்சம். அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் சில மாதங்களில் வாங்கலாம்.

Related Posts :