oecdபாரிஸ்: உலகளாவிய பொருளாதார அமைப்பான, உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) கடல் கடந்த வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பண மோசடிகளை எதிர்கொள்ள முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உக்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இந்தியாவும் சம்மதித்துள்ளது. “உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OCED), இந்த புதிய நெறிமுறைகளை ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் பரிந்துரைக்காக பிப்ரவரி மாதம் 22-23 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கவுள்ள சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக வழங்கும்” என அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த அமைப்பின் பொருளாதாரக் கொள்கைகளை உலகெங்கிலும் 120 நாடுகள் பின்பற்றுகின்றன.

ஜி-20 நாடுகள் அந்த அமைப்பை தன்னிச்சையான விவரப் பரிமாற்றங்களுக்கான ஒரு நெறிமுறையை உருவாக்க 2013ஆம் ஆண்டில் அழைப்பு விடுத்திருந்தன. இது உலகளாவிய ஒரு வெளிப்படையான வரி விதிப்பை உண்டாக்க ஒரு உந்துதலாக இருக்கும்” என அந்த அமைப்பு தெரிவித்தது.

Related Posts :